Tamil Grammar MCQ Quiz - Objective Question with Answer for Tamil Grammar - Download Free PDF
Last updated on Jun 24, 2025
Latest Tamil Grammar MCQ Objective Questions
Tamil Grammar Question 1:
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் ?
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 1 Detailed Solution
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்
Tamil Grammar Question 2:
முல்லைப்பாட்டு __________ ஆல் இயற்றப்பட்டது.
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 2 Detailed Solution
முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1- 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
Tamil Grammar Question 3:
தவறான இணை எது ?
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 3 Detailed Solution
தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.
நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை
கன்று: மா , புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
குருத்து: வாழையின் இளநிலை
பிள்ளை: தென்னையின் இளநிலை;
Tamil Grammar Question 4:
தவறாக பொருந்தியுள்ளது எது ?
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 4 Detailed Solution
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்
Tamil Grammar Question 5:
பொருத்துக :
1. முன்பனிக் காலம் – (a)மார்கழி, தை
2. பின்பனிக் காலம் – (b)மாசி, பங்குனி
3. இளவேனிற் காலம் – (c)ஆனி, ஆடி
4. முதுவேனிற் காலம் – (d) சித்திரை, வைகாச
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 5 Detailed Solution
1. கார்காலம் – ஆவணி, புரட்டாசி
2. குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிக் காலம் – மார்கழி, தை
4. பின்பனிக் காலம் – மாசி, பங்குனி
5. இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி
6. முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி
Top Tamil Grammar MCQ Objective Questions
பொருந்தாத இணையினைக் கண்டறிக
திணை - தொழில்
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 6 Detailed Solution
Download Solution PDF- முல்லை:
- நிலம் = காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும்
- தொழில் = சாமை, வரகு விதைத்தல், களை கட்டல், அரிதல்
- உணவு = வரகு, சாமை, முதிரை
- தெய்வம் = மாயோன்
- பறவை = காட்டுக்கோழி
- பாலை:
- நிலம் = சுரமும் சுரம் சார்ந்த நிலமும் ஆகும்
- தொழில் = போர் செய்தல், சூறையாடல்
- உணவு = வழியில் பறித்த பொருள்
- பறவை = புறா, பருந்து, கழுகு
- தெய்வம் = கொற்றவை
- குறிஞ்சி:
- நிலம் = மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும்
- தொழில் = வெறியாடல், மலைநெல் விதைத்தல், தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
- உணவு = மலை நெல், தினை, மூங்கில் அரிசி
- தெய்வம் = சேயோன்
- பறவை = கிளி, மயில்
- மருதம்:
- நிலம் = வயலும் வயல் சார்ந்த நிலமும் ஆகும்
- தொழில் = வயலில் களை கட்டல், நெல்லரிதல்
- உணவு = செந்நெல், வெண்ணெல்
- தெய்வம் = வேந்தன்
- பறவை = நாரை, அன்னம், மகன்றில்
கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, ‘யான்’ என்பது ‘என்’ என்றும் ‘யாம்’ என்பது ‘எம்’ என்றும், ‘நாம்’ என்பது ‘நம்’ என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 7 Detailed Solution
Download Solution PDF- நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்.
- நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்.
- வேற்றுமை உருபேற்கும் போது, யான் என்பது என் என்றும், யாம் என்பது எம் என்றும், நாம் என்பது நம் என்றும் திரியும்.
- நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.
- நீர், நீவிர், நீங்கள் என்பன முன்னிலை பன்மை பெயர் ஆகும்
‘இன்மையுள் இன்மை விருந்தொரால்’ - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 8 Detailed Solution
Download Solution PDF- விருந்தொரால் என்ற சொல் விருந்து என்பதை குறிக்காமல் விருந்தை நீக்குதல் என்று ஆகி வருவதால் இது பண்பாகு பெயர் ஆகும்.
- இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
- சொற்பொருள்:
- இன்மை = இல்லாமை, வறுமை, ஏழ்மை
- ஒரால் = நீங்குகை
- வன்மை = வலிமை, கடினம்
- மடவார் = மூடர், அறிவில்லாதார்
- பொறை = பொறுமை
- பொருள்:
- இல்லாமையிலும் இல்லாமை விருந்தினரை உபசரிக்கத் தவிர்வது. வல்லமையிலும் வல்லமை அறிவில்லாதவர்கள் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்.
- பண்பு பெயர்:
- ஒரு பொருளின் பண்பை குறிக்கும் பெயர் சொல் பண்பு பெயர் ஆகும்.
- எ. கா.: நீளம்
- வினையாலணையும் பெயர்:
- வினையை குறிக்காமல் அந்த வினை செய்தவரை குறிக்கும் சொல் வினையாலணையும் பெயர் ஆகும்.
- எ. கா.: வந்தவர்
- வியங்கோள் வினைமுற்று:
- வேண்டல் விதித்தல் வாழ்த்துகள் வைதல் முதலிய பொருள்களில் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும் வினைமுற்று வியங்கோல் வினைமுற்று ஆகும்.
- எ. கா.: வாழ்க
தவறான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 9 Detailed Solution
Download Solution PDF- மாம் பிஞ்சு என்பதன் மரபு சொல் மாவடு.
- இளந் தேங்காய் என்பதன் மரபு சொல் வழுக்கை.
- வாழைப் பிஞ்சு என்பதன் மரபு சொல் வாழைகச்சல்.
- முருங்கைப் பிஞ்சு என்பதன் மரபு சொல் முருங்கைப்பிஞ்சு என்பதே ஆகும்.
- தாவரங்களின் இளமை மரபு பெயர்கள்:
- அவரைப்பிஞ்சு
- கத்தரிப்பிஞ்சு
- வெள்ளரிப்பிஞ்சு
- கொய்யாப்பிஞ்சு
- பலா மூசு
- கமுகங்கூந்தல்
- பனையோலை
- தாழைமடல்
- நெற்றாள்
- சோளத்தட்டு
- வேப்பந்தழை
பகுபதத்தில் குறைந்தளவு/கட்டாயமாக இருக்க வேண்டிய உறுப்புகள்?
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 10 Detailed Solution
Download Solution PDF- பகுபதத்தில் குறைந்தளவு/கட்டாயமாக இருக்க வேண்டிய உறுப்புகள் பகுதி, விகுதி
- பகுபதம்:
- மேலும் பிரித்தால் பொருள் தரக் கூடிய சொல் பகுபதம் எனப்படும்
- பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை
, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புகள் ஆகும்.
- பகாப்பதம்:
- மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடுக:
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 11 Detailed Solution
Download Solution PDF- பெறு என்பது பெற்றான் என்பதன் வினைமுற்று ஆகும்.
- பெற்றான் என்பது வினை எச்சம் ஆகும்.
- வினைமுற்று:
- ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் வினைமுற்று எனப்படும்.
- இது திணை, பால், எண், இடம், காலம் காட்டும் பயனிலையாக வரும்.
- வினைமுற்று ஆறு வகைப்படும். அவை:
- தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, உடன்பாடு வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று.
- பெற்றவன்,பெற்றவர் என்பது பெயரெச்சம் ஆகும்.
அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 12 Detailed Solution
Download Solution PDF- மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு என்பதே சரியான அகரவரிசைப்படி அமைந்துள்ளது.
- மீமிசை என்றால் மலை உச்சி, மேலே என்று பொருள்.
- முந்நீர் என்பதன் பொருள் கடல் ஆகும்.
‘வரைந்த ஓவியம்’ எவ்வகைத் தொடர் ?
கூற்று 1 : வினையெச்சத் தொடர்
கூற்று 2 : பெயரெச்சத் தொடர்
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 13 Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
Key Points
- வரைந்த ஓவியம் என்பது பெயரெச்சத் தொடர் ஆகும்.
- வரைந்த ஓவியம் - இதில் ‘வரைந்த’ என்னும் எச்சவினை ‘ஓவியம்’ என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத்தொடர் ஆகும்.
Additional Informationவினையெச்சத் தொடர்:
- வினையெச்சச் சொல் வினைமுற்றுச் சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது வினையெச்சத் தொடர் ஆகும்.
- (எ. கா) தேடிப் பார்த்தான் - இதில் ‘தேடி’ என்னும் வினையெச்ச சொல் ‘பார்த்தான்’ என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்துள்ளது.
- ஒரு வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்ந்து வருவது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
- (எ. கா) சென்றனர் வீரர் - இதில் ‘சென்றனர்’ என்னும் வினைமுற்று ‘வீரர்’ என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
பிரித்தெழுதுக:
நாத்தொலைவில்லை
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 14 Detailed Solution
Download Solution PDF- நாத்தொலைவில்லை என்பதை நா + தொலைவு + இல்லை என பிரிக்கலாம்.
- முந்நூறு = மூன்று + நூறு
- பேராசிரியர் = பெருமை + ஆசிரியர்
- நூற்றாண்டு = நூறு + ஆண்டு
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
Answer (Detailed Solution Below)
Tamil Grammar Question 15 Detailed Solution
Download Solution PDFசரியான பதில் எதுகை
Key Points
- எதுகை: ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ >இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
- மோனை: ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
- இயைபு: ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு எனப்படும்.
- எ. கா. முகிலே பொழிலே
- முரண்: அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.
- எ.கா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்